கொச்சி ஐகோர்ட்டில் வழக்கு விசாரணைக்கு பிறகு வெளியே சென்ற இளம் பெண்ணை கடத்திச் செல்ல முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார். தப்பி ஓடிய 3 பேரை காவல்துறை தேடி வருகிறார்கள்.
இதுபற்றி போலீஸ் காவல்துறை கூறப்பட்டதாவது:-
ஆலப்புழை மாவட்டம் காயங்குளம் சிறக்கடவு பகு தியை சேர்ந்தவர் கார்த்தி கேயன். இவருடைய மகள் நிம்மி என்ற அம்னா (வயது 25).
இவர், தான் சார்ந்திருந்த மதத்தில் இருந்து மாறி, கோழிக்கோட்டில் உள்ள தர்பியத்துல் இஸ்லாம் சபையில் மத படிப்பில் சேர்ந்திருந் தார். இந்த நிலையில் இளம் பெண் நிம்மியை காண வில்லை எனக்கூறி வீட்டார் போலீசில் புகார் செய்தனர்.
கொச்சி ஐகோர்ட்டில் ஆட் கொணர்வு மனுவும் தாக்கல் செய்தனர். இந்த நிலையில், நிம்மி நேற்று முன்தினம் கொச்சி ஐகோர்ட்டில் தானாக ஆஜரானார்.
தன்னை யாரும் பிடித்து வைக்கவில்லை என நிம்மி கோர்ட்டில் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து, அவரை விருப்பப்படி படிக்கச் செல்ல கோர்ட்டு அனுமதி அளித் தது.
அதன் பிறகு, இளம் பெண் நிம்மி ஐகோர்ட்டு வளாகத் தில் இருந்து வெளியே சென் றார். அப்போது அவரை 4 வாலிபர்கள் சேர்ந்து காரில் வலுக்கட்டாயமாக ஏற்றி கடத்திச் செல்ல முயன்றனர். அதைப் பார்த்ததும் அங்கிருந்த போலீசார் அவர்களை தடுத் தனர்.
இதையடுத்து, 3 வாலிபர் கள் அங்கிருந்து தப்பி ஓடினர். கார் டிரைவரும் திருச்சூர் வடக்காஞ்சேரியை சேர்ந்த வருமான சரத் (25) போலீ சாரிடம் சிக்கினார்.
அதைத் தொடர்ந்து வாலி பர் சரத்தை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய 3 பேரை வலைவீசி தேடி வரு கிறார்கள்.