Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

அன்டேர்ஸ் பெஹ்ரிங் ப்ரிவிக் மீதான விசாரணைகள் மீண்டும் ஆரம்பம்

நோர்வேயின் ஒஸ்லோ நகரில் இடம்பெற்ற மிக மோசமான படுகொலைகளுடன் தொடர்புடைய அன்டேர்ஸ் பெஹ்ரிங் ப்ரிவிக் மீதான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஒஸ்லோவில் உள்ள நீதிமன்றம் ஒன்றில் இந்த விசாரணைகள் நடத்தப்பட்டுவருகின்றன.

இவர் மீதான குற்றச்சாட்டுக்கள் சந்தேகத்துக்கு அப்பால் நிரூபிக்கப்படும் பட்சத்தில் 21 வருடங்களுக்கும் அதிகமான காலம் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

நோர்வே மக்களை அச்சத்தில் ஆழ்த்திய அன்டேர்ஸ் பெஹ்ரிங் ப்ரிவிக்கின் தாக்குதல்களில் 77 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.

இந்தக் கொலைகளுக்கான பொறுப்பை தாம் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ள ப்றிவிக், இது ஒரு குற்றச் செயல் என்பதனை மறுத்துள்ளார்.

ஆளும் கட்சி ஏற்பாடு செய்திருந்த இளைஞர் மாநாடு ஒன்றில் வைத்து இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருந்தன.

இதேவேளை ப்றிவிக் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று அவரது சட்டத்தரணிகள் தெரிவித்துவருகின்றனர்.
[vuukle-powerbar-top]

Recent Post