தற்போது ஒருவர் தமிழ்நாட்டில் 'கருப்பு எம்.ஜி.ஆர்.' என்று தன்னை சொல்லிக்கொள்கிறார். இதில் எங்களுக்கு பாதியளவு மட்டுமே உடன்பாடு உண்டு. கருப்பு என்று மட்டுமே அவர் சொல்லிக் கொள்ளலாம். எம்.ஜி.ஆர். என்று சொல்ல அவருக்கு தகுதி கிடையாது என்று அதிமுக எம்.எல்.ஏ வெங்கடாசலம் கூறியுள்ளார்.
சட்டசபையில் நேற்று உயர் கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பெருந்துறை அதிமுக எம்.எல்.ஏ வெங்கடாசலம் பேசுகையில்,
தமிழில் பிடிக்காத ஒரே வார்த்தை 'மன்னிப்பு' என்று வசனம் பேசியவர்கள் இன்று வேறு மாதிரி புலம்பிக்கொண்டிருக்கிறார்கள். இப்போது அவர்கள் தமிழில் பிடிக்காத ஒரே வார்த்தை ‘டெபாசிட்’ என்று பேசிக் கொண்டிருக்கின்றனர்.
சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் அவர்களுக்கு கிடைத்த தோல்வியே இதற்கு காரணமாகும்.
தற்போது ஒருவர் தமிழ்நாட்டில் 'கருப்பு எம்.ஜி.ஆர்.' என்று தன்னை சொல்லிக்கொள்கிறார். இதில் எங்களுக்கு பாதியளவு மட்டுமே உடன்பாடு உண்டு. கருப்பு என்று மட்டுமே அவர் சொல்லிக் கொள்ளலாம். எம்.ஜி.ஆர். என்று சொல்ல அவருக்கு தகுதி கிடையாது.
எம்.ஜி.ஆர். வாழ்ந்த போது அவர் தனது பெயரில் பொறியியல் கல்லூரியோ, மருத்துவக் கல்லூரியோ தொடங்கி நடத்தவில்லை. எம்.ஜி.ஆர் வாழ்ந்த காலத்திலேயே கருணாநிதி தலைமையில் திருமணம் செய்து கொண்டவர்களுக்கு எல்லாம் எம்.ஜி.ஆர். பற்றி பேசவோ, அவரது பெயருக்கு உரிமை கொண்டாடவோ எந்த தகுதியும் கிடையாது என்றார் வெங்கடாசலம்.