ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில், பாராளுமன்றம் மற்றும் வெளிநாட்டு தூதரகங்கள் மீது நேற்று தீவிரவாதிகள் ராக்கெட்டுகள், வெடிகுண்டுகளை வீசி அதிரடி தாக்குதல் நடத்தினார்கள்.
இதில் 25-க்கும் மேற்பட்டோர் பலி ஆனார்கள். ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்து வந்த தலீபான் தீவிரவாதிகளை கடந்த 2001-ம் ஆண்டு அமெரிக்க படைகள், ஆட்சியை விட்டு விரட்டி அடித்தன. அதைத்தொடர்ந்து, அங்கு அமெரிக்காவின் ஆதரவுடன் ஹமீது கர்சாய் தலைமையிலான அரசு பதவி வகித்து வருகிறது. தலீபான்களால் அச்சுறுத்தல் நீடித்து வருவதால், அமெரிக்கா உள்ளிட்ட பன்னாட்டு படைகள் (நேட்டோ) ஆப்கானிஸ்தானிலேயே முகாமிட்டுள்ளன. இருப்பினும், இப்படைகள் இந்த ஆண்டில் இருந்து படிப்படியாக வெளியேற திட்டமிட்டுள்ளன.
2014-ம் ஆண்டு இறுதிக்குள் முற்றிலும் வெளியேற முடிவு செய்துள்ளன. இந்நிலையில், தலீபான்களின் அச்சுறுத்தல் இன்னும் நீடிப்பதை உறுதிப்படுத்தும் வகையில் நேற்று ஒரே நேரத்தில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் தலீபான்கள் தாக்குதலில் ஈடுபட்டனர். தலைநகர் காபூலில் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாட்டு தூதரகங்கள் அமைந்துள்ள பகுதியில் எப்போதுமே கடுமையான பாதுகாப்பு இருக்கும். அதையும் மீறி, நேற்று பிற்பகல் 1 மணியளவில், காபூலுக்குள் கனரக ஆயுதங்களுடன் தலீபான் தற்கொலைப்படை தீவிரவாதிகள் அதிரடியாக புகுந்தனர்.
பாதுகாப்பு வளையத்தை உடைத்தெறிந்து தூதரக பகுதியில் தாக்குதல் நடத்தினர். அமெரிக்க தூதரகம், ஜனாதிபதி மாளிகை, ஈரான் தூதரகம் ஆகியவற்றின் அருகே அமைந்துள்ள `காபூல் ஸ்டார்' என்ற ஐந்து நட்சத்திர ஓட்டலுக்குள் தலீபான்கள் புகுந்து அதை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அந்த ஓட்டலில் அவர்கள் நடத்திய தாக்குதலில், ஓட்டல் தீப்பற்றி எரிந்தது. பாராளுமன்ற கட்டிடம் எதிரே உள்ள 6 மாடி கட்டிடத்தை ஆக்கிரமித்துக் கொண்ட தீவிரவாதிகள், அங்கிருந்து பாராளுமன்றம் மீது ராக்கெட்டுகளை வீசி தாக்கினர். துப்பாக்கியாலும் சுட்டனர்.
மற்ற தீவிரவாதிகள், பாராளுமன்றத்துக்குள் நுழைய முயன்றனர். இருப்பினும், அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினர், தலீபான்களுடன் கடுமையான துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டனர். தாக்குதலின்போது, பாராளுமன்ற கூட்டம் நடந்து கொண்டிருந்தது. இருப்பினும், தாக்குதலுக்கு முன்பே பெரும்பாலான எம்.பி.க்கள் அங்கிருந்து சென்று விட்டனர். வெளியேறாமல் இருந்த சில எம்.பி.க்களும், அவர்களின் மெய்க்காப்பாளர்களும், பாதுகாப்பு படையினருடன் கைகோர்த்து சண்டையில் ஈடுபட்டனர். `
நான் மக்கள் பிரதிநிதி. மக்களை பாதுகாப்பது என் கடமை' என்று காந்தகார் எம்.பி. நயீம் ஹமீத்சாய் பெருமை பொங்க கூறினார். பாதுகாப்பு படையினரின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல், தலீபான்கள் பாராளுமன்ற வளாகத்தில் இருந்து ஓடிவிட்டனர். இந்த சண்டையில், தலீபான்கள் தரப்பில் உயிர்ச்சேதம் ஏற்பட்டதாக காபூல் போலீஸ் தலைவர் முகமது அïபி கூறினார். காபூலில் உள்ள தூதரக பகுதியையும் தலீபான்கள் ரணகளமாக்கினர். இங்கிலாந்து தூதரகம், ஜெர்மன் தூதரகம், ரஷிய தூதரகம் ஆகியவற்றின் மீது ராக்கெட்டுகளை வீசி தாக்கினர். இங்கிலாந்து தூதரக ஊழியர்கள் வசித்து வரும் வீட்டின் மீதும் ராக்கெட்டுகளை வீசினர். ஊழியர்கள், பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டதால், உயிரிழப்பு ஏதும் இல்லை. தாக்குதலை தொடர்ந்து, பெரும்பாலான தூதரகங்களில், ஆபத்து கால ஒலி எழுப்பப்பட்டது. இங்கிலாந்து தூதரக கண்காணிப்பு கோபுரம் மீது 2 ராக்கெட்டுகள் தாக்கின. ஜெர்மனி தூதரகம் அருகே வெளிநாட்டினர் அதிகமாக வந்து செல்லும் ஒரு சூப்பர் மார்க்கெட் மீது 3 ராக்கெட்டுகள் வீசப்பட்டன. தாக்குதலுக்குள்ளான தூதரக கட்டிடங்களில் இருந்து கரும்புகை வெளியேறியபடி இருந்தது. இதனால், அப்பகுதியே புகை மண்டலமாக காட்சி அளித்தது. தலீபான்கள், பல்வேறு திசைகளில் இருந்து பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கியால் சுட்டவண்ணம் இருந்தனர். `நேட்டோ' படையின் சர்வதேச பாதுகாப்பு உதவி படை தலைமையகம் மீதும் தாக்குதல் நடத்தினர். இந்த சண்டையால், தலைநகர் காபூல், போர்க்களமாக மாறியது. தாக்குதலை முறியடிக்க, அதிக எண்ணிக்கையிலான ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அமெரிக்க படையினரும் குவிக்கப்பட்டனர். அவர்களுக்கும், தலீபான்களுக்கும் இடையே பல மணி நேரம் சண்டை நீடித்தது. காபூலில் தாக்குதல் நடத்திய அதே நேரத்தில், வேறு மாகாணங்களிலும் தலீபான்கள் தற்கொலை தாக்குதல் நடத்தினர். நங்கரார் மாகாணம் ஜலலாபாத் விமான நிலையத்தை தகர்ப்பதற்காக, 4 மனித வெடிகுண்டுகள் வந்தனர். அவர்களை பாதுகாப்பு படையினர், நுழைவாயிலில் தடுத்து நிறுத்தினர். உடனே, 2 மனித வெடிகுண்டு தீவிரவாதிகள், குண்டுகளை வெடிக்கச்செய்து உயிரிழந்தனர். மற்றொரு தீவிரவாதி, சுட்டுக் கொல்லப்பட்டான். இன்னொருவன் உயிருடன் பிடிபட்டான். இதனால், விமான நிலைய தகர்ப்பு முயற்சி முறியடிக்கப்பட்டது. ஜலலாபாத்தில், நேட்டோ படையின் சர்வதேச பாதுகாப்பு உதவி படையின் மாகாண புனரமைப்பு குழு கட்டிடத்தை தலீபான்கள் தாக்க வந்தனர். வாசலிலேயே, ஒரு மனித வெடிகுண்டு வெடித்துச் சிதறினான். உள்ளே நுழைய முயன்ற மேலும் 2 தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். ஜலலாபாத்தில் உள்ள ராணுவ அகாடமி கட்டிடத்தையும் தலீபான்கள் தாக்கினர். லோகர் மாகாணத்தில் கவர்னர் மாளிகை, போலீஸ் துறை வளாகம், மாகாண புனரமைப்பு குழு வளாகம், மாகாண உளவுத்துறை கட்டிடம் ஆகியவற்றின் மீதும் தாக்குதல் நடத்தினர். தாக்குதலின்போது, கவர்னர் மாளிகையில் இருந்த கவர்னரும், ஊழியர்களும் பெரிதும் அவதிப்பட்டனர். பக்தியா மாகாணத்தில், விமான நிலையம், போலீஸ் தலைமையகம், உளவுத்துறை கட்டிடம் ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்தினர். பக்தியா பல்கலைக்கழகம் அருகே நடந்த தாக்குதலில் 2 மாணவர்கள் உள்பட 10 பேர் காயம் அடைந்தனர். அங்கு ஒரு கட்டிடத்தில் பதுங்கி இருந்த தலீபான்கள் மீது `நேட்டோ' ஹெலிகாப்டர்கள் தாக்குதல் நடத்தின. இந்த சண்டைகளில், 25 பேர் பலியானதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதல்களில் தலீபான்களில் ஒரு பிரிவான ஹக்கானி குழு ஈடுபட்டு இருப்பது, முதல்கட்ட உளவு தகவலில் தெரிய வந்திருப்பதாக ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே, இந்த தாக்குதல்களுக்கு தலீபான் இயக்கம் பொறுப்பு ஏற்றுள்ளது. இதுதொடர்பாக அந்த இயக்கத்தின் செய்தித் தொடர்பாளர் சபியுல்லா முஜாகத், நிருபர்களுக்கு அனுப்பி உள்ள செய்தியில் கூறி இருப்பதாவது:- தலீபான்கள், வசந்த காலத்தில் தாக்குதல் நடத்தும் நிலையில் இல்லை என்று ஆப்கன் அரசும், ஆக்கிரமிப்பு படைகளும் சமீபத்தில் தெரிவித்தன. அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், எங்கள் வசந்தகால தாக்குதலை தொடங்கி விட்டோம். எங்கள் இயக்க முஜாகிதீன்கள் இந்த தாக்குதல்களில் ஈடுபட்டனர். தற்கொலை படை உடையையும், சிறிய மற்றும் கனரக ஆயுதங்களையும் அவர்கள் பயன்படுத்தினர். அவர்களையும், ஆயுதங்களையும் காபூலுக்குள் கொண்டு வருவது எளிதாக இருந்தது. இதற்கு உள்ளூர் உதவியே காரணம். இது பல மாதங்களாக திட்டமிட்டு, நடத்தப்பட்ட தாக்குதல் ஆகும். இதில் எங்கள் எதிரிகளுக்கு பலத்த சேதம் ஏற்பட்டது. இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி தூதரகங்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. பிற்பகல் 1 மணிக்கு தொடங்கிய தாக்குதல், நீடித்து வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது. ஜனாதிபதி மாளிகையையும் தாக்கியதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், அத்தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை.