புதுச்சேரியின் துணை நிலை ஆளுநராக, இதுவரை அந்தமான் நிகோபார் துணைநிலை ஆளுநர் ஏ.கே.சிங் கூடுதலாக பதவி வகித்து வந்தார்.
இந்நிலையில், 2 ஆண்டுகளுக்கு முன்பாக பாஜக-வில் இணைந்து, டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் அக்கட்சியின் முதல்வர் வேட்பாளராகப் போட்டியிட்டு தோல்வி அடைந்த இந்தியாவின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரியான கிரண் பேடியை புதுச்சேரியின் துணை நிலை ஆளுநராக குடியரசுத் தலைவர் நியமித்துள்ளார்.
புதுச்சேரியில் அண்மையில் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது