மெட்ராஸ் படத்தில் அறிமுகமானவர் கேத்ரீன் தெரசா. படம் ஹிட்டானாலும் அதன் பின் அதிகம் கவனிக்கப் படாமல் இருந்தார்.
இப்போது ரசிகர்களிடம் இவரை கொண்டு சேர்த்திருப்பது, கணிதன் படத்தில் அதர்வாவுடன் ஆடியுள்ள யப்பா.. ஷப்பா பாடல் தான்.
ரசிகர்கள் மட்டுமில்லாமல் சில ஹீரோக்களின் தூக்கத்தையும் அந்த பாடல் கெடுத்துள்ளதாக பேச்சு. இந்நிலையில் கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக்கில் ஒரு குத்தாட்ட பாடலுக்கும் ஒருசில வசன காட்சிகளிலும் நடிக்க கேத்ரீன் தெரசா ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.