இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத அமைப்புக்கு ஆள் சேர்க்கும் வேலையில் ஈடுபட்டு வந்த, துபாயில் வசிக்கும் கர்நாடகாவை சேர்ந்த அப்துல் வகீத் சிட்டிபாவா என்ற தீவிரவாதியை இன்று டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இந்திய புலனாய்வு அமைப்பினர் கைது செய்துள்ளனர்.
இந்திய நகரங்களில் தாக்குதல் நடத்த அப்துல் வகீத் சிட்டிபாவா சதி திட்டம் தீட்டினார் என்றும், அதற்காக அவருக்கு ஏற்கனவே ரெட் நோட்டீஸ் அனுப்பப் பட்டதாகவும் இந்திய புலனாய்வு அமைப்பின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.