சட்டமன்ற தேர்தல் - 2016
கல்வி மற்றும் மொழிக் கொள்கை - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
• மத்திய அரசு மாநில மக்களிடம் தொடர்புகொள்வதாக இருந்தால் மாநில அரசின் மூலமாக, மாநில அரசின் மொழியிலேயே தொடர்புகொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.
• நாணயங்கள், அஞ்சல் தலைகள், கடவுச் சீட்டு, வருமான வரி அட்டை ஆகிய மத்திய அரசு சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களும் அந்தந்த மாநில மொழிகளில் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
• தமிழகத்தைப் போல எல்லா மாநிலங்களிலும் இருமொழிக் கொள்கையைக் கொண்டு வரவேண்டும். இந்திக்கு கொடுக்கப்பட்டுள்ள அலுவல் மொழித் தகுதியை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
• 8 வது அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள 23 மொழிகளும் ஆட்சி மொழிகளாகும் வரை ஆங்கில மொழி மட்டுமே இந்தியாவின் அலுவல் மொழியாக நீடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
• மத்திய அரசு இந்தி மொழியை ஊக்குவிக்க செலவு செய்யும் நிதியை மாநில மொழிகளுக்கு சம அளவில் பகிர்ந்து அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
• தமிழகத்தில் இயங்கும் அனைத்து வங்கிகளிலும் தமிழ் மொழி கட்டாய அலுவல் மொழியாக்க நடவடிக்கை எடுக்கப்படும். அந்தந்த மாநிலங்களில் இயங்கும் நடுவண் அரசு நிறுவனங்களில் அந்தந்த மாநில மொழியே ஆட்சி மொழியாக இருக்க வேண்டும்.
• தமிழ் மொழியை உடனடியாக இந்தியாவின் ஆட்சி மொழியாக்க நடவடிக்கை எடுக்கப்படும். நீதிமன்ற மொழியாகவும் அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
• திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
• இந்தியா முழுவதும் தாய் மொழிக் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். பயிற்று மொழியாக தாய் மொழியே இருக்க வேண்டும். ஆங்கிலம் ஒரு மொழிப் பாடம் மட்டுமே. தனியார் பள்ளிகளில் கட்டாயம் ஒரு பிரிவு தமிழ் வழிக் கல்வி இலவசமாக கற்றுக் கொடுக்க வேண்டும். இல்லையெனில் பள்ளி உரிமம் ரத்து. புதிய தமிழ் ஆய்வுகள் தமிழக அரசின் செலவில் உலக அளவில் ஊக்கப்படுத்தப்படும். அறிவியல் தமிழ் கணினித்தமிழ் அனைத்து பள்ளிகளிலும் கட்டாய பாடமாக சேர்க்கப்படும்.
அமெரிக்காவில் உள்ள ஆர்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழுக்கான இருக்கை உருவாக தமிழக அரசே முழுப் பொறுப்பை ஏற்கும்.
இந்தி மாநிலங்களில் உள்ள பள்ளிகளில் தமிழ் மொழியை ஒரு விருப்ப பாடமாக சேர்க்க அந்த மாநில அரசுகள் ஒப்புக்கொண்டால் தமிழகத்தில் இந்தி மொழியை விருப்பப் பாடமாக புரிந்துணர்வு ஒப்பந்த அடிப்படையில் பள்ளிகளில் சேர்க்கப்படும்.
நடுவண் பள்ளிகள் , சர்வதேச பள்ளிகள், மாநில பள்ளிகள் என்ற பேதம் இல்லாதவாறு அனைவர்க்கும் ஒரே சீரான தரமான கல்வி முறை பயிற்று விக்கப்படும். அனைத்து தனியார் பள்ளிகளும் கொஞ்சம் கொஞ்சமாக அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் இலவச தரமான, தமிழ் வழிக் கல்வியை அனைவருக்கும் அரசு கொடுக்க இயலும். வேளாண்மை மற்றும் சுய தொழில் வகுப்புகள் கட்டாய பாடமாக்கப்படும். தமிழர்களின் எண் கணிதமுறை, ஓகக் கலை , தற்காப்பு கலை , மருத்துவம், விளையாட்டு, தமிழிசை, பண்டைய அறிவியல் கட்டடக் கலைகள் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும். திருக்குறள் செயல்வழிக் கல்வி அறிமுகப்படுத்தப்படும்.
தமிழகத்தில் உள்ள எந்த பள்ளிகளிலும் எந்த மாணவரும் சேரலாம். அதற்கான நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்படும். நுழைவுத் தேர்வு மூலமாக மாணவர்களை பள்ளியில் சேர்க்கும் பள்ளிகளின் உரிமம் ரத்து செய்யப்படும். இதனால் அனைவருக்கும் கல்வி உரிமை கிடைக்கும். ஒவ்வொரு நாளும் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்தே பாடம் படிக்கும் முறையும் அறிமுகப்படுத்தப்படும்.
நடுவண் அரசின் பாடத்திட்டத்தை விட சிறப்பான பாடத்திட்டத்தை தமிழக அரசு மாணவர்களுக்கு வழங்கும். மாணவர்களை வெறும் சந்தைப்படுத்தும் பண்டமாக மாற்றும் கல்வித் திட்டத்தை நீக்கி இயற்கையை, மக்களை, மொழியை நேசிக்கும் மனிதர்களாக மாற்றும் கல்வித் திட்டத்தை நாம் அறிமுகப்படுத்துவோம்.
• நடுவண் அரசுப் பள்ளிகள் அனைத்தையும் மாநில அரசுகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும். நடுவண் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு வரை தமிழ் மொழிப் பாடம் முதல் பாடமாக கட்டாயம் பயிற்றுவிக்கப்படுதல் வேண்டும்.. தமிழகம் மற்றும் தமிழர் வரலாறு குறித்த பாடத்திட்டம் நடுவண் பள்ளியில் கட்டாயம் இடம்பெறும்.
• தாய்மொழிக் கல்வியில் படித்தவர்களுக்கு பொறியில், மருத்துவப் படிப்புகளில் 50% ஒதுக்கீடும், கூடுதல் மதிப்பெண்களும் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். மீதமுள்ள 50% தமிழை ஒரு பாடமாக படிப்பவர்களுக்கே ஒதுக்கப்படும். அரசு வேலை வாய்ப்பிலும் இதே இட ஒதுக்கீடு முறை பின்பற்றப் படும். தமிழகத்தில் தொழில் தொடங்கும் நிறுவனங்களும் இதே இட ஒதுக்கீட்டு முறையை பின்பற்ற ஆவண செய்யப்படும்.
• அனைத்து மாநிலங்களிலும் இந்தித் திணிப்பை நடுவண் அரசு உடனே கைவிட வேண்டும். அதற்கான அழுத்தங்களை தமிழக அரசு கொடுக்கும் . பிற மாநில முதல்வர்களை சந்தித்து இந்தித் திணிப்புக்கு எதிராக செயலாற்ற தமிழக அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும்
• ஒரு மாநிலத்தவர் வேறு மாநிலத்தில் குடியேறினால் அந்த மாநில மொழியை அவர்கள் கற்க வேண்டும்.
• இந்தி பேசும் மாநிலங்களில் பிற மாநில மொழிகளை திணிக்காதது போல இந்தி அல்லாத மாநிலங்களில் இந்தி திணிப்பு நடக்கக் கூடாது.
• அனைத்து மாநில மொழிகளுக்கும் சம உரிமை வழங்கப்படுதல் வேண்டும். அதற்க்கான மொழி சம உரிமை சட்டம் இயற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழை ஆட்சி மொழியாக்க நடுவண் அரசு நடவடிக்கை எடுக்காத நிலையில் தமிழகத்தில் உள்ள நடுவண் அரசு நிறுவனங்கள் தமிழகத்தில் இயங்க முடியாதவாறு நடுவண் அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்படும்.
இராணுவத்தில் கட்டாயம் தமிழ் மொழி இந்திக்க்கு நிகரான தகுதியை பெற நடவடிக்கை. தமிழ் நாட்டு ராணுவத்தினர் தமிழகத்தை தாண்டி வெளி மாநிலங்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை . அதுபோலவே வடநாட்டு இந்தி இராணுவத்தினருக்கும் தமிழ்நாட்டில் பணிபுரிய அவசியமில்லை. இதனால் யாருக்கும் மொழி சிக்கல் ஏற்படாது. இதை கருத்தில் கொண்டு இராணுவத்தில் மாற்றங்கள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழகத்தில் உள்ள அனைத்து வானூர்திகளிலும் தமிழ் மொழி கட்டாயம் இடம்பெறும். தமிழ் தெரிந்தவர்களுக்கே வானூர்திகளில் வேலை வாய்ப்பு . இந்தித் திணிப்பு அடியோடு இங்கு நிறுத்தப்படும், இதனால் தமிழ் தெரியாத இந்தி மக்களுக்கு தமிழகத்தில் வேலை வாய்ப்பு இருக்காது . தமிழர்களுக்கே தமிழகத்தில் வேலை வாய்ப்பு உறுதி செய்யப்படும். இதே நடைமுறை தொடர்வண்டி , கப்பல் துறை என அனைத்து நடுவண் அரசு துறைகளிலும் பின்பற்றப்படும்.
தமிழகத்தில் இயங்கும் தொடர்வண்டித்துறை தமிழக அரசின் கீழ் கொண்டு வரப்படும். தொடர்வண்டி பயணசீட்டு , பயணிகள் அட்டவணை அனைத்தும் தமிழிலும் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கும். இந்தி நீக்கப்படும்.