ஜெயா தேர்தல் பரப்புரை கூட்டத்தில் 2 பேர் பலி . கொளுத்தும் வெயிலில் எந்த அரசியல் கூட்டத்திற்கும் மக்கள் செல்ல வேண்டாம் !
வெயில் மற்றும் கூட்ட நெரிசல் காரணமாக, விருத்தாசலத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட தொண்டர்கள் இருவர் உயிரிழந்தனர். காவலர்கள் உட்பட மேலும் 8 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஜெயலலிதா போன்ற தலைவர்கள் அவர்கள் பாதுகாப்பாக தேர்தல் பரப்புரை செய்ய குளிர் சாதனப் பெட்டிகளை கூடவே எடுத்து வருகிறார்கள். இவர்களுடைய கூட்டத்திற்கு பணம் கொடுத்து தான் ஆட்களை கூட்டி வருகிறார்கள் . பணத்திற்கு ஆசைப்பட்டு வரும் மக்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாகிறார்கள். ஜெயா போன்றவர்கள் ஆட்சிக்கு வந்தாலும் ஏழை எளிய மக்களை குறித்து கவலைப்பட மாட்டார்கள் . தேர்தல் பரப்புரையின் போதும் கவலைப் பட மாட்டார்கள்.
ஆகவே பொதுமக்கள் கட்சித் தொண்டர்கள் , பணத்திற்கு ஆசைப்பட்டு இப்படியான கூட்டத்திற்கு போகும் மக்கள் தயவு செய்து கொளுத்தும் வெயிலில் இந்த அரசியல் பொதுக் கூட்டத்திற்கு செல்ல வேண்டாம். அதிமுக கூட்டம் மட்டுமல்ல எந்த அரசியல் கட்சியின் கூட்டத்திற்கும் இந்த கோடை காலத்தில் மக்கள் செல்ல வேண்டாம். எல்லா கட்சிகளின் கொள்கைகளும் தொலைக்காட்சி மற்றும் பிற ஊடகத்தில் வருகிறது. அதை பார்த்து நாம் யாருக்கு வேண்டுமானலும் வாக்களிக்கலாம். சுயநலனுக்கு அரசியல் செய்யும் தலைவர்களுக்காக நாம் நம்முடைய இன்னுயிரை இழக்க வேண்டிய அவசியமில்லை. இந்த விழிப்புணர்வை மக்களிடம் நாம் கொண்டு செல்ல வேண்டும்.