உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் அண்மையில் வெளியான "நீர்ப்பறவை" படமானது எல்லோர் மத்தியிலும் மிகப் பெரிய பாராட்டை பெற்று வருகிறது.உதயநிதியின் சமூக வலைத்தளத்தில் இப்படியான ஒரு படத்தை தயாரித்த தங்களுக்கு நன்றி என தங்கள் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் உதயநிதிக்கு ஒரு சேர தெரிவித்து வருகிறார்கள்.
இப்படியான பாராட்டு மழையில் நனைத்து வரும் உதயநிதி மீண்டும் இயக்குனர் சீனு ராமசாமியுடன் சேர்ந்து ஒரு படத்தை தயாரிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.
"நீர்ப்பறவை" படமானது இயக்குனர் சீனு ராமசாமிக்கு மூன்றாவது படமாகும்.அவரது இயக்கத்தில் உருவான "தென் மேற்கு பருவக்காற்று" தேசிய விருது பெற்ற படமாகும்.
"நீர்ப்பறவை" படத்தில் விஷ்ணு, சுனைன்னா,நந்திதா தாஸ்,சரண்யா பொன்வண்ணன்,தம்பி ராமையா மற்றும் பாண்டி ஆகியோர் நடித்திருந்தனர்.