தற்போது ஷங்கர் இயக்கிவரும் "ஐ" படத்திற்கான படப்பிடிப்பின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பும் தற்போது முடிவடைந்து விட்டது.முதல் கட்டமாக சென்னையில் நடைபெற்ற படப்பிடிப்பில் சண்டைக் காட்சி மற்றும் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டன.
இரண்டாவது கட்ட படப்பிடிப்பிற்காக சீனா சென்ற படக்குழுவினர் அங்கு மிக அபாரமான சண்டைக்காட்சிகளை படமாக்கினர்.கொலிவூட்டில் தயாரிக்கப்பட்ட சண்டைக்காட்சிகள் பல நிறைந்த படங்களான "த மட்ரிக்ஸ்", கில் பில் சீரிஸ்" மற்றும் ஆஸ்கார் விருது பெற்ற படமான "க்ரூசிங் டைகர் கிடுன் டிராகன்" போன்ற படங்களில் சண்டைக் காட்சிகளை இயக்கிய யுயின் வூ பிங் என்பவர் இயக்கிய சண்டைக் காட்சிகளையே மேற்படி படக்குழுவினர் படமாக்கினர்.
இவற்றையெல்லாம் முடித்துவிட்ட ஷங்கர் தற்போது ஐரோப்பிய நகரங்களுக்கு சென்று அங்கு இதுவரை தமிழ் சினிமா காலடி எடுத்து வைக்காத இடங்களில் பாடல் காட்சிகளை படமாக்க தீர்மானித்துள்ளார்.