தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தி அதிகரித்துள்ளதால் மின்வெட்டு நேரம் குறைய வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் நீடிக்கும் தொடர் மின்வெட்டால் மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் பெய்து வரும் கனமழையால் காற்றாலை மின் உறபத்தி 270 மெகாவாட் அளவு உயர்ந்துள்ளதால் மின் வெட்டு நேரம் குறைய வாய்ப்பு உள்ளதாக மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மேலும் வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தில் மேலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.இதனால் காற்றாலை மின் உற்பத்தியும் அதிகரிக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் நிலவி வரும் மின் தட்டுப்பாட்டை நீக்க மத்திய அரசும் கைவிரித்துவிட்ட நிலையில் இயற்கையை நம்பியே தமிழகம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.