Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இந்தியாவில் இருந்து தாயகம் திரும்பிய அகதியை துரத்தும் இலங்கை புலனாய்வுப் பிரிவு

இந்தியாவில் தஞ்சமடைந்திருந்து நாடு திரும்பிய குடும்பத் தலைவர் ஒருவரை, இலங்கை புலனாய்வுப் பிரிவினர் விசாரணை என்ற பெயரில் தினமும் துன்புறுத்தி வருகின்றனர். 

திருகோணமலை, சாம்பல்தீவு 4ம் வட்டாரத்தைச் சேர்ந்த 50 வயதுடைய கோவிந்தன் சிவராசா என்ற குடும்பத் தலைவரையே இலங்கை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தொடர் விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றனர். 

2006ம் ஆண்டு இடம்பெயர்ந்து இந்தியா சென்ற இவரது கடந்த செப்ரெம்பர் மாதம் இலங்கை திரும்பி சொந்த இடத்தில் குடியேறினர். 

இந்தநிலையில், கடந்த ஒக்ரேபர் மாதம் 15ம் நாள் தொடக்கம், தினமும் காலை, மாலை வேளைகளில் இவரது வீட்டுக்கு வரும் இலங்கை புலனாய்வுப் பிரிவினர் தொடர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர். 

இலங்கைப் புலனாய்வுப் பிரிவினரின் தொடர் விசாரணைத் துன்புறுத்தல்களால், குடும்பத்தில் உள்ளவர்கள் அச்சமும் விரக்தியும் அடைந்த நிலையில் உள்ளனர்.
[vuukle-powerbar-top]

Recent Post