ஆந்திர மாநிலத்தில் தெலுங்கானா பகுதியை சேர்ந்த எம்.பி.க்கள், தனி தெலுங்கானா மாநிலம் அமைப்பதில் மத்திய அரசு காலதாமதம் செய்கிறது.
தனி தெலுங்கானா மாநிலம் அமைப்பது தொடர்பாக மத்திய அரசு உடனே அறிவிப்பு வெளியிட வேண்டும் என்பதை வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்தனர்.
தற்போது, சில்லறை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீடு விவகாரம் ஒரு புறம் இருக்க மத்திய அரசு தெலுங்கானா காங்கிரஸ் எம்.பி.க்களின் ஆதரவை பெறுவதற்காக அனைத்து கட்சி கூட்டத்தை அறிவித்துள்ளது. மத்திய அரசு அனைத்து கட்சி கூட்டத்தை வருகிற 28ம் தேதி நடத்துகிறது.