Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

கருணாநிதி மரணம்: சமூக வலைத் தளங்களில் பரவிய வதந்தி !


திமுக தலைவர் கருணாநிதி உடல் நலம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அதனால் அவர் இறந்து விட்டார் எனவும் செய்திகள் தீயை போல் பரவியது. நேற்று இரவு முதல் இந்த செய்தி தீயாக பரவியது. இதனால் திமுக மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த தமிழகத்திலும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த பரபரப்பு இணையத்தையும் விடவில்லை. முகநூல் ட்விட்டர் போன்ற சமூக வலைத் தளங்களில்  மக்களின் நடுவே உண்மையையை அறிய வேண்டும் என்ற ஆர்வம் பெருகியது. ஒருவருக்கு ஒருவர் உண்மை என்னாவாக இருக்கும் என்று  கேட்டுக் கொண்டனர்.   ஆனால் பின்பு தான் தெரியவந்தது இது உண்மை செய்தி அல்ல வெறும் வதந்தி  தான் என்று . திமுக தலைவர் கருணாநிதியே இந்த வதந்திக்கு  முற்றுப் புள்ளி வைத்தார் . 

இன்று அண்ணா அறிவாலயத்தில் கொடுத்த பேட்டியில் தான் நலமுடம் இருப்பதாகவும் , தன்னை  பற்றிய  செய்திகள் யாரோ விசமிகள்  பரப்பி வருவதாகவும் சொல்லி அதற்கு தனது கண்டனத்தை பதிவு  செய்தார். இதனால் திமுக அபிமானியால் நிம்மிதி  பெரு  மூச்சு விட்டனர் . திமுக அல்லாத  சிலர்  வெறும் வதந்தி தான் ஏமாற்றம் அடைத்தனர் . இது குறித்து சமூக வலைத் தளங்களில் தகவல்கள் சூடாக பரிமாறப் பட்டு வருகின்றது .   எனினும் இவ்வாறன வதந்திகள் ஏற்கனவே பல முறை பரப்பப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத் தக்கது . ஆனால் ஒவ்வொரு முறையும் கருணாநிதி தான் நலமுடம் இருப்பதாக பேட்டி அளித்துள்ளார். 
[vuukle-powerbar-top]

Recent Post