குழந்தை தொழிலாளர் (தடுப்பு மற்றும் ஒழுங்குமுறை) சட்ட திருத்த மசோதா, 2012' ஐ, மத்திய, தொழிலாளர் நலத்துறை அமைச்சர், மல்லிகார்ஜுன கார்கே, ராஜ்யசபாவில் 04.12.2012 செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்தார்.
இந்த மசோதாவிற்கு, நடுவண் அமைச்சரவை, ஆகஸ்ட் மாதம் ஒப்புதல் அளித்திருந்தது. தற்போது நடைமுறையில் உள்ள, குழந்தை தொழிலாளர் நல சட்டங்களின் படி, சில குறிப்பிட்ட வேலைகளில் மட்டும், குழந்தைகளை வேலைக்கு அமர்த்தினால், அதிகபட்சம், ஒரு ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்க முடியும்.
இதில், மாற்றம் செய்யப்பட்டு, வரையப்பட்டுள்ள, புதிய மசோதாவில், எவ்வித வேலைகளிலும், 14 வயதிற்கு குறைந்த குழந்தைகளை வேலையில் அமர்த்தக் கூடாது என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குழந்தைகளை எவ்வித பணியிலும் ஈடுபடுத்தவும், அனுமதிக்கவும் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தை தொழிலாளர்களாக இருந்து, மீட்கப்படும் குழந்தைகளுக்கு, அவர்கள் மீண்டும் கல்வியில் தொடர வாய்ப்பு வழங்கவும், மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குழந்தைகளை எவ்வித பணியிலும் ஈடுபடுத்தவும், அனுமதிக்கவும் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தை தொழிலாளர்களாக இருந்து, மீட்கப்படும் குழந்தைகளுக்கு, அவர்கள் மீண்டும் கல்வியில் தொடர வாய்ப்பு வழங்கவும், மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மசோதாவில், குழந்தை தொழிலாளர் (தடுப்பு மற்றும் ஒழுங்குமுறை) சட்டம், 1986ல் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குழந்தைகளை பணியில் அமர்த்துபவர்களுக்கு, தற்போது நடைமுறையில் உள்ள, ஒரு ஆண்டு சிறை தண்டனை, புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மசோதாவில், இரண்டு ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதிகபட்ச அபராதமும், 20 ஆயிரம் ரூபாயிலிருந்து, 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், பதினெட்டு வயதிற்கு உட்பட்ட பருவ வயது இளையோர்கள் (டீன்ஏஜ்), எந்த அபாயகரமான தொழிலும், ஈடுபடுத்தக் கூடாது எனவும், இந்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.