Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ஜெகன்மோகன் ரெட்டியின் நீதிமன்ற காவல் 19ம் தேதி வரை நீட்டிப்பு

ஒய்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவரும், கடப்பா தொகுதியின் எம்.பி.யுமான ஜெகன்மோகன் ரெட்டி சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சஞ்சாலகுடா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ரெட்டியின் காவல் முடிவதை தொடர்ந்து இன்று அவர் சி.பி.ஐ. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது நீதிமன்றம் ஜெகன்மோகன் ரெட்டியின் காவலை 19ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

ஜெகன்மோகனின் ஜாமீன் மனுவை சி.பி.ஐ. கோர்ட் தள்ளுபடி செய்ததால் ஐதராபாத் உயர்நீதிமன்றத்தில் மற்றொரு ஜாமீன் மனுவை தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான் விசாரணை வருகிற 11ம் தேதி நடைபெறுகிறது.

மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் ஆந்திர மந்திரி மோபிதேவி வெங்கட ரமணா ராவ் மற்றும் தொழிலதிபர் நிம்மகட்டா பிரசாத் ஆகியோரது காவலையும் நீதிமன்றம் இன்னும் 14 நாட்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post