Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

டிசம்பர் 1-ந்தேதி உலக எயிட்ஸ் நாளாக அனுசரிப்பு

ஆண்டுதோறும், டிசம்பர் 1-ந்தேதி உலக எயிட்ஸ் நாளாக அனுசரிக்கப்படுகிறது. 5 வருடத்திற்கு ஒருமுறை எய்ட்ஸ் நாளிற்கான முக்கிய குறிக்கோள் ஒன்று தீர்மானிக்கப்பட்டு அதனை எட்டுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும்.

அதன்படி இந்த ஆண்டு எய்ட்ஸ் நோயை சுழியமாக்குதல் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்தாண்டு முதல் கல்லூரிகளில் புதியதாக 50 செஞ்சுருள் சங்கம் மற்றும் எச் ஐ வி தொற்றுடையோர் பயன் பெறும் வகையில் 7 புதிய ஏ ஆர் டி மையங்களையும் திறக்க திட்டமிட்டுள்ளது எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்கம்.

மேலும் எச் ஐ வி யால் பாதிக்கப்பட்டவர்களை புறக்கணிக்காமல் சமூகத்தில் அவர்களை சமமாக நடத்துவது உள்ளிட்ட விழிப்புணர்ச்சி நிகழ்ச்சிகளையும் நடத்த திட்டமிட்டுள்ளது.

இத்தகைய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மக்களை முழுமையாக சென்றடைந்தாலே, இந்த டிசம்பர் ஒன்றாம் தேதியின் முக்கியக் குறிக்கோளான எய்ட்சை சுழியமாக்குதல் என்ற இலக்கை விரைவில் அடைந்து, எய்ட்ஸ் இல்லா உலகத்தை உருவாக்கலாம்.
[vuukle-powerbar-top]

Recent Post