இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் "ஐ"படத்தின் படப்பிடிப்பிற்காக சீனா சென்றிருந்த "ஐ"படக்குழுவினர் அங்கு படப்பிடிப்பை முடித்துவிட்டு அண்மையில் சென்னை திரும்பியுள்ளனர்.
கடந்த 45 நாட்களாக அங்கு படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்த "ஐ" படக்குழுவினர், ஆஸ்கார் விருது பெற்ற இயக்குனரான ஆங் லீயின் "க்ரூஷிங் டைகர் கிடுன் டிராகன்"படத்தில் சண்டை காட்சிகளை இயக்கிய இயக்குனரின் இயக்கத்தில் மெய் கூச்செறியும் சண்டைக் காட்சிகளை படமாக்கியுள்ளனர்.இக்காட்சியில் ராம் குமார் மற்றும் சுரேஷ் கோபி சம்பந்தப்பட்ட காட்சிகளே படமாக்கப்பட்டுள்ளன.
தற்போது இப்படத்திற்கான இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்கள் சென்னையில் ஆரம்பமாகவுள்ளது.இப்படத்திற்கான படப்பிடிப்பில் "அனல்"அரசுவின் சண்டை காட்சிகளில் நடிக்கவுள்ளார் விக்ரம்.இப்படத்திற்காக மீண்டும் "6 பாக்ஸ்" எனப்படும் உடல் கட்டமைப்புடன் இவர் நடிக்கவுள்ளார்.
ஏற்கனவே விக்ரம் நடித்த படங்களில் கதையின் தன்மைக்கு ஏற்ப பல கடுமையான உடற்பயிற்சிகள் மேற்கொண்டு கட்டுக்கோப்பான உடல்வாகை கொண்டிருந்தார்.இதேபோல் இப்படத்திலும் இவ்வாறானதொரு உடல்வாகை கொண்டு நடிக்கவுள்ளார் விக்ரம்.