Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

யாழ்-பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல் - அமெரிக்கா கவலை

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் மீது இலங்கை படையினரும், காவல்துறையினரும் மேற்கொண்ட தாக்குதல் குறித்து கவலை வெளியிட்டுள்ள அமெரிக்கா, அமைதி வழியில் முன்னெடுக்கப்படும் எதிர்ப்புப் பேரணிகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று இலங்கைக்கு கோரியுள்ளது. 

இது தொடர்பாக கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில், “யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார். சுதந்திர ஊடகங்கள் இலங்கை அரச அதிகாரிகளால் இம்சிக்கப்பட்டுள்ளன.

தேடுதல் ஆணையின்றி ஊடகவியலாளர்கள் சோதனையிடப்பட்டுள்ளனர். 
இவையெல்லாவற்றையும் ஊடக சுதந்திரத்தை ஒடுக்கும் நடவடிக்கையாகவே கருதவேண்டியுள்ளது.

அத்துடன், யாழ்ப்பாணத்தில் மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவங்கள் குறித்து தூதரகம் ஆழ்ந்த கவலையடைகிறது. 

அமைதிவழியில் நடத்தப்படும் எதிர்ப்புப் பேரணிகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று இலங்கை அரச அதிகாரிகளை நாம் கேட்டுக் கொள்கிறோம்." என்று கூறப்பட்டுள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post