Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

அணுஉலை போராட்டத்தை ஒடுக்க மேலும் இருவர் மீது குண்டர் சட்டம் - உதயகுமார் கண்டனம்

அணு உலை போராட்டத்தை ஒடுக்க மேலும் இருவர் குண்டர் சட்டத்தில் கைது - உதயகுமார் கண்டனம்

இரு வாரங்களுக்கு முன்னர்   கூடங்குளத்தை  சேர்ந்த அப்பாவிகள் இருவர் மீது குண்டர் சட்டத்தை பயன்படுத்தி வேலூர் சிறையில் அடைத்தது தமிழக காவல் துறை. இப்போது மீண்டும்  குண்டர் சட்டத்தை  பாய்த்து மேலும் இருவரை வேலூர் சிறையில் அடைத்துள்ளது காவல் துறை. வைராவிக் கிணறு ஊரை  சேர்ந்த சிந்துபாரத்  என்ற இளைஞர் மீதும் , கூடங்குளம் பகுதியை சேர்ந்த தவசிக் குமார் என்ற இளைஞர் மீதும் இந்த குண்டர்  சட்டம் பாய்ந்துள்ளது.

அணு உலை போராட்டத்தை நீர்த்து  போக வைக்க இவ்வாறான நடவடிக்கை எடுத்து  வருகிறது  தமிழக அரசு. அணு உலை போராளிகளை இவ்வாறு  கைது  செய்வதின் மூலம் அணு உலைப் போராட்டத்தை இல்லாமல் செய்து விடலாம் என்று அரசு நினைக்கிறது. தமிழக அரசுக்கும் , இந்திய அரசுக்கும் ஏற்கனவே சர்வதேச மன்னிப்பு சபை தன்னுடைய  கண்டனத்தை பதிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத் தக்கது . அரசு வன்முறையை , ஒடுக்குமுறையை கைவிட வேண்டும் என்ற கோரிக்கை  வைத்து இணைய விண்ணப்பத்தை தொடங்கி உள்ளது சர்வதேச மன்னிப்பு சபை. 

மனித உரிமை ஆர்வலர்கள் உலக அளவில் இதற்கு கண்டனம் தெரிவித்து  வருகின்றனர் . லண்டனில் உள்ள இந்திய தூதரகம் முன்பாகவும் அணு உலைப் எதிர்ப்பாளர்கள் போராட்டம் நடத்தி தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அணு சக்திக்கு  எதிரான மக்கள்  இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்  உதயகுமார் தமிழக அரசின் இந்த செயலுக்கு  கண்டனம் தெரிவித்துள்ளார் .

சர்வதேச மன்னிப்பு சபையின் இணைய விண்ணப்பத்தில்கையெழுத்திட இந்த சுட்டியை பயன்படுத்தவும்.

http://act.amnesty.org.in/protect_kudankulam?utm_campaign=kudankulam&recruiter_id=11284&utm_medium=email&utm_source=amnestyindia



[vuukle-powerbar-top]

Recent Post