துப்பாக்கி படத்தில் இஸ்லாமிய மக்களை வழக்கம் போல் தீவிரவாதியாக சித்தரித்து உள்ளனர். இதனால் மக்கள் மத்தியில் இஸ்லாமியர் என்றாலே தீவிரவாதிகள் என்ற கருத்தியல் நிலை கொண்டுள்ளது. இஸ்லாமியர்களை இவ்வாறு சித்தரிப்பதை எதிர்த்து முஸ்லீம் மக்கள் கொதித்து எழுந்தனர்.
இந்நிலையில் நடிகர் விஜய், எஸ்.ஏ.சந்திராகேகர், இயக்குனர் முருகதாஸ், தயாரிப்பளார் தாணு ஆகியோர் இஸ்லாமியர்களிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்டனர்.
இன்று மாலை சென்னையில் பத்திரிக்கையாளர் சந்திப்பில், நடிகர் விஜய், அவரது தகப்பனார் எஸ்.ஏ.சந்திராகேகர், இயக்குனர் முருகதாஸ், தயாரிப்பளார் தாணு ஆகியோர் கலந்து கொண்டனர்.
துப்பாக்கி படத்தில் வரும் இஸ்லாமியர்களை பற்றிய அவதூறுகளை இன்னும் சில தினங்களில் நீக்குவதாகவும், இனி வரும் காலங்களில் இஸ்லாமியர்களை பற்றிய தவறான செய்திகள் இருக்காமால் பார்த்துக் கொள்வதாகவும் கூறினர்.
துப்பாக்கி படத்தில் வரும் சில காட்சிகளினால் இஸ்லாமியார்கள் மன வேதனைக்கு உள்ளானதற்கு நாங்கள் பகிரங்க மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். அனைத்து இஸ்லாமிய தலைவர்களிடமும் விஜய் மற்றும் முருகதாஸ் ஆகிய நாங்கள் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம் என்று கூறியுள்ளனர்.
நன்றி - திருப்பூர். நாஸர் தீன்