
இது தொடர்பாக தகவல் வெளியிட்டுள்ள தீவிரவாத தடுப்புப்பிரிவு அதிகாரி ஒருவர்,
“யாழ்ப்பாணம், வவுனியா, திருகோணமலை உள்ளிட்ட பல பகுதிகளிலும் புலிக்கொடிகள் பறக்க விடப்பட்டதாகவும், புலிகளுக்கு ஆதரவான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்ததாகவும் தகவல் கிடைத்துள்ளது.
இந்தச் சம்பவங்கள் தொடர்பாக விசாரித்து வரும் உள்ளூர் காவல் நிலையங்களின் உதவியுடன் இதன் பின்னணி தொடர்பாக விசாரணைகளை தொடக்கியுள்ளோம்.
சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு சிறப்பு புலனாய்வுக் குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டு, இதில் சம்பந்தப்பட்டுள்ள புலிகள் ஆதரவு சக்திகளை இனங்காண்பதற்கான விசாரணைகள் நடத்தப்படவுள்ளன.” என்று கூறியுள்ளார்.
அதேவேளை, பெயர் வெளியிட விரும்பாத பாதுகாப்பு அதிகாரி ஒருவர், “இந்தச் செயற்பாட்டுக்கு நிதி வழங்கியோர் பற்றிய விசாரணைகளை நடத்தவுள்ளதாகவும், இது நாட்டுக்கு அவப்பெயரை ஏற்படுத்த மேறகொள்ளப்பட்ட முயற்சி என்றும் கூறியுள்ளார்.