விஜய் நடிப்பில் வெளிவந்த "துப்பாக்கி" படத்தில் இடம்பெற்ற "கூகுள் கூகுள்" பாடலின் வெற்றியை தொடர்ந்து, தன்னுடைய பாடும் திறைமையை மெருகூட்டவுள்ளார் விஜய்.
தற்போது ஏ.எல்.விஜய் இயக்கத்தில் விஜய் நடித்துக் கொண்டிருக்கும் படத்திலும் ஒரு பாடலை விஜய்யை வைத்தே பாட வைக்க இப்படத்தின் இயக்குனர் விஜய் தீர்மானித்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கும் இப்படத்தில் விஜய் பாடும் பாடல் அவருடைய 25 ஆவது பாடலாக அமையும்.தற்போது இப்படத்தின் படப்பிடிப்பின் முதல் கட்ட படப்பிடிப்பிற்காக மும்பையில் முகாமிட்டுள்ளனர் இப்படக்குழுவினர்.
இப்படத்தில் விஜய் ஜோடியாக நடிக்கவுள்ளார் அமலா பால்.இவர்களுடன் சந்தானம் மற்றும் நாசர் ஆகியோரும் நடிக்கவுள்ளனர்.