இலங்கையின் முதலாவது தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் இன்று வானில் ஏவப்படவுள்ளதாக இலங்கை அரசாங்க ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
சீனாவின் சீ சங் ஏவுதளத்தில் இருந்து இந்த செயற்கைக்கோள் இன்று ஏவப்படவுள்ளது.
முன்னதாக, கடந்த 22ம் நாள் இந்த செயற்கைக்கோள ஏவுப்படுவதாக இருந்தபோதும், சீரற்ற காலநிலையால், அது பிற்போடப்பட்டது.
சுப்ரீம் சற் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த செயற்கைக்கோள் பிரெஞ்சு நிறுவனத்தால், இலங்கை- சீன கூட்டத் தயாரிப்பாக 320 மில்லியன் டொலர் செலவில் வடிவமைக்கப்பட்டது.
இந்த செயற்கைக்கோளை இயக்குவதற்கான முழுச்செலவு 360 மில்லியன் டொலராகும்.
இந்த செயற்கைக்கோள் இலங்கை அரசுக்குச் சொந்தமாக இல்லாதபோதிலும், இதற்காக சீனாவின் நிதியுதவி பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், குற்றச்சாட்டுகள் உள்ளன.
இலங்கை அதிபரின் இளைய மகன் றோகித ராஜபக்சவே இந்தத் திட்டத்தை கையாண்டு வருவது குறிப்பிடத்தக்கது.