இன்றைய தமிழ் சினிமாவில் எல்லா நாயகர்களும் தங்கள் பெயருக்கு முன்னால் ஒரு புனைப் பெயரை வைப்பது வழக்கம்.இன்றைய தமிழ் சினிமாவில் நடிக்கும் நாயகர்களின் படங்கள் சிறந்த முறையில் திரையரங்குகளில் திரையிடப்படுகிறதோ இல்லையோ அவர்களும் தங்களுக்கு ஒரு புனைப் பெயரை வைத்துக் கொள்கிறார்கள்.
இந்த ஆசை நகைச்சுவை நாயகர்களையும் விட்டு வைக்கவில்லை.அவர்களும் தங்களுக்கான புனைப்பெயரை சூட்டிக்கொள்ள தயங்கியதில்லை.அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவில் நகைச்சுவையில் கொடி கட்டிப் பறக்கும் வடிவேலு தன் பெயருக்கு முன்னால் "வைகை புயல்" என்றும் விவேக் அவர்கள் தன் பெயரின் முன்னால் "சின்ன கலைவாணர்" என்றும் புனைப்பெயர் வைத்துள்ளனர்.
ஆயினும் இன்றைய தமிழ் சினிமாவில் எல்லா நாயகர்களினதும் விருப்பத்துக்குரிய நகைச்சுவை நாயகனாக இருக்கும் சந்தானத்திற்கு இவ்வாறான ஒரு புனைபெயர் தனக்கு இல்லையே என்ற வருத்தம் நீண்ட நாட்களாகவே இருந்து வருகிறது.
இதை அறிந்த,தற்போது அவர் நடித்து வரும் "சேட்டை" படத்தின் படக்குழுவினர் சந்தானத்திற்கு ஒரு பெயரை சூட்டியுள்ளனர்."காமடி சூப்பர் ஸ்டார்" என்பதே அப்பெயராகும்.
இது குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை தொடர்பு கொண்ட சந்தானம் இப்புனைப் பெயரை தான் சூடிக்கொள்ள தங்களுக்கு சம்மதமா என கேட்டுள்ளார். அதற்கு ரஜினி அவர்களும் தனக்கே உரிய பாணியில் சம்மதம் தெரிவித்துள்ளார்.
இதனால் மட்டற்ற மகிழ்ச்சியில் உற்சாகமாக காணப்படுகிறார் "காமடி சூப்பர் ஸ்டார்" சந்தானம்.