2010 இல் வெளியான "விண்ணைத்தாண்டி வருவாயா" படத்தின் பின்னர் சிம்பு மற்றும் கெளதம் வாசுதேவ் மேனனின் படங்கள் என்றாலே பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இருக்கும்.
இதிலும் இவர்கள் இருவரும் மீண்டும் கூட்டணி சேர்ந்தால் எப்படி இருக்கும்? தமிழ் சினிமா இரசிகர்களின் ஆவலை பூர்த்தி செய்ய 2013 இன் ஆரம்பத்தில் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கப்போகும் புதிய படத்தில் சிம்பு நடிக்கக்கூடும் என்ற செய்தி கோடம்பாக்கம் முழுவதும் கிசுகிசுக்கப்படுக்கிறது.
இப்புதிய படத்தின் கதையானது "விண்ணைத்தாண்டி வருவாயா" படத்தின் தொடர்ச்சியாகவோ அல்லது ஒரு புதிய கதையாகவோ அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எது எவ்வாறு இருந்தாலும் கெளதம் மற்றும் சிம்பு கூட்டணி இணையும் பட்சத்தில் அது தமிழ் சினிமா இரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.