மேலும், இலங்கை போர் குறித்த ஐ.நா.வின் உள் அறிக்கையில் இருந்து நாம் பாடங்களை கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், உலக மக்களில் குறிப்பாக போர் பகுதியில் சிக்கியவர்களின் நம்பிக்கையை ஐ.நா. பெறும் வகையில், நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
இலங்கை இறுதிப் போரின்போது, ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்படுவதை தடுக்க ஐ.நா. தவறிவிட்டதாக அதன் வரைவு உள் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. இந்த அறிக்கை விவரங்கள் வெளியானதால் ஐ.நா.,வின் பெயருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் பான் கி மூன் கூறியுள்ளார்.
இதனிடையே, போர் பகுதிகளில் இருந்து ஐ.நா. ஊழியர்களை மிரட்டி வெளியேற்றவில்லை என்று ஐ.நா.,வுக்கான இலங்கை தூதர் பாலித கோஹன்ன கூறியுள்ளார். இலங்கையில் கடந்த 2009-ல் இறுதிகட்டப் போரின்போது, ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்படுவதை தடுக்க ஐ.நா. சபை தவறிவிட்டதாக அதன் உள் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.