முகநூல் நிறுவனமானது தனது ஊழியர்களை அண்ட்ரோய்ட் ஸ்மார்ட் கைபேசிகளை உபயோகிக்கும் படி வலியுறுத்தியுள்ளது.
அப்பிளின் ஐபோன்களை விட அண்ட்ரோய்டிற்கு மாறும் படி முகநூல் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இதன்மூலமாக முகநூல் அண்ட்ரோய்ட் மென்பொருளில் உள்ள குறைபாடுகளை இலகுவாக அடையாளாங்காணும் பொருட்டே இவ்வேண்டுகோளை முகநூல் நிறுவனம் விடுத்துள்ளதாகத் தெரிகின்றது.
முகநூல் தலைமையகத்தின் அறிவித்தல் பலகையில் ஒட்டப்பட்டுள்ள படங்கள் இதற்கு ஆதாரமாக அமைந்துள்ளது.
எதிர்வரும் 3 வருடங்களில் அப்பிளின் ஐ.ஓ.எஸ் இனை அண்ட்ரோய்ட் பல மடங்கால் பின் தள்ளிவிடும் என புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றமையும் முகநூல் நிறுவனத்தின் வேண்டுகோளுக்கான காரணமாக இருக்கலாம்.