அமெரிக்காவில் கடந்த வருடங்களில் பிறப்பு வீதம் குறைவடைந்துள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.
2007 ஆம் ஆண்டு தொடக்கம் 2010 ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் பிறப்பு வீதம் எட்டாக குறைவடைந்துள்ளது.
1920 ஆம் ஆண்டுக்குப் பின்னர் 2011 ஆம் ஆண்டிலேயே குறைந்தளவான பிறப்பு வீதம் பதிவாகியுள்ளது.
கடந்த வருடம் 3.95 மில்லியன் பிறப்புக்கள் அமெரிக்கா முழுவதும் பதிவாகியுள்ளது.
அமெரிக்காவின் பொருளாதாரத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் பிறப்பு வீதத்தில் செல்வாக்குச் செலுத்தியுள்ளதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.