ஒரு உண்மையான காதல் கதை எவ்வாறு அமையுமோ அதே விதத்தில் அமைந்துள்ளது "நீதானே என் பொன் வசந்தம்" படத்தின் கதை.இப்படத்தை பார்க்கும் ஒவ்வொரு காதல் ஜோடியும் தங்கள் காதல் வாழ்க்கையை மீட்டு பார்க்கும் ஒரு உன்னத தருணத்தை அடைவார்கள் இது எல்லாமே கெளதம் வாசுதேவ் மேனனின் மாயா ஜாலங்களில் ஓன்று.
இப்படத்தின் படப்பிடிப்பில் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த அழகிய சம்பவங்களை மீண்டும் ஒரு முறை வாழ்ந்தது போல் இருந்ததாக கூறியுள்ளார் நடிகர் ஜீவா.
"நீதானே என் பொன் வசந்தம்" படத்தின் தொகுப்பாளராக பணியாற்றி வரும் அந்தனி கூறுகையில்,தன் வாழ்க்கையில் நடந்து முடிந்த மண்ணுக்குள் புதைக்கப்பட்ட சில சுவாரஷ்யமான சம்பவங்களை தனக்கு மீண்டும் இப்படம் ஞாபகப்படுத்துவதாக அமைந்ததாக கூறினார்.
இப்படத்தின் பின்னர் நித்யா என்ற பெண் காதல் உணர்வுகளால் கட்டுண்ட ஒரு புதுமைப்பெண்ணாக விளங்குவாள் என்றும் ஜீவா காதலின் மறு உருவமாகவே வாழ்ந்திருப்பதாகவும் கூறியுள்ளனர் இப்படத்தில் பணியாற்றிய கலைஞர்கள்.
இப்படத்தின் இறுதிக் காட்சியில் அருணும் நித்யாவும் பல வருடங்களுக்கு பிறகு ஓன்று சேரும் தருணம் இப்படத்தை பார்க்கும் ஒவ்வொரு உயிரிலும் ஊடுருவும் காட்சியாக அமையவுள்ளது.