அமெரிக்காவுக்குத் தனிப்பட்ட பயணத்தை மேற்கொண்டுள்ள இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச, அமெரிக்க அரசஅதிகாரிகளுடன் பேச்சுக்கள் எதையும் நடத்தமாட்டார் என்று அவரது பேச்சாளர் மொகான் சமரநாயக்க தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுக்கு இரகசியமான சென்ற இலங்கை
அதிபர் மகிந்த ராஜபக்ச, அங்கு இராஜாங்கத் திணைக்கள அதிகாரிகளுடன் பேச்சுக்களை நடத்தக் கூடும்என்று ஊகங்கள் வெளியிடப்பட்டன.
எனினும் இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள இலங்கை அதிபரின் பேச்சாளர் மொகான் சமரநாயக்க,
“இது அதிகாரபூர்வ பயணமல்ல, எனவே அமெரிக்க அரசாங்கத்துடன் எந்தப் பேச்சுக்களும் நடத்தப்படமாட்டாது.
அங்கு அமெரிக்க அரசின பிரதிநிதிகளுடன் எந்தவிதமாக அதிகாரபூர்வ சந்திப்புகளுக்கும் ஏற்பாடு செய்யப்படவில்லை.” என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே அமெரிக்கா சென்றுள்ள இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச, மேரிலன்டில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் இலங்கை
பிரதமர் டி.எம். ஜெயரட்ணவை சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.