
பாரதிய ஜனதாவின் கோரிக்கையை ஏற்று, வாக்கெடுப்பு நடைபெறுமானால், மதவாதக் கட்சிகளுக்கு ஆதாயம் ஏற்படும் என்றும், அத்தகைய சூழல் ஏற்படாமல் தடுக்க, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நீடிக்க வேண்டிய சூழ்நிலை, காலத்தின் கட்டாயம் என்றும் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
அந்நிய முதலீட்டை அனுமதிப்பதற்கு மாநிலங்கள் கட்டாயப்படுத்தப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், தமிழகத்தை பொறுத்தவரை விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும் எந்த இடைஞ்சலும் ஏற்படாது என்று கருணாநிதி தெரிவித்துள்ளார்.