Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

துப்பாக்கி: திரைவிமர்சனம்!

Thuppakki - Review
ஏ.வி.எம் ராஜேஸ்வரி திரையரங்கில் துப்பாக்கி படம் முடிந்து இப்போது தான் வெளியே வந்தேன். வழக்கம் போலவே இரசிகர்கள் கூட்டம் அள்ளியது. படம் விஜய் இரசிகர்களுக்காகவே எடுத்தது போல இருந்தது. கதை சிறப்பாக பின்னப்பட்டதோ அல்லது, 'எங்கேயும் எப்போதும்' போல் வித்தியாசமானதோ இல்லை. ஒற்றை வரியில் சொல்லப் போனால், எம்.ஜி.ஆர் காலத்து கதை தான்.

அர்ஜூன், விஜயகாந்த் மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்த நாட்டை தீவிரவாதிகளிடமிருந்து  காப்பாற்றும் கதைகளில் விஜய் நடித்திருந்தால் எப்படி இருக்கும்? அப்படித்தான் இருக்கிறது படம். ராணுவத்தில் முழு நேரமாக நாட்டைக் காக்கும் விஜய் மும்பைக்கு விடுமுறையில் வருகிறார். அங்கே காவல்துறையில் இருக்கும் சத்தியனுடன் சேர்ந்து ஊர் சுற்றுகிறார். ஒரு முறை அவர்கள் இருவரும் பயணம் செய்த வண்டியில் ஒரு தீவிரவாதி வேறெங்கோ கொண்டு செல்ல முற்பட்ட குண்டு வெடித்து விடுவதில் ஆரம்பமாகிறது பிரச்சினை. விஜய் அத்தீவிரவாதியைப் பிடித்து காவல்துறையில் ஒப்படைக்கிறார். காவல்துறையில் இருக்கும் கருப்பு ஆடுகளால், அந்த தீவிரவாதி வெளியே வந்து விட, விஜயின் வேட்டை தீவிரவாதிகளுக்கு எதிராக மட்டுமல்லாமல் தவறான போலீசைக் கூட தற்கொலை செய்து கொள்ள வைத்துவிடும் அளவுக்கு இருக்கிறது. 

சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு முதல் காட்சியில் இருந்தே அபாரம். பஸ் மற்றும் கப்பலில் குண்டு வெடிக்கும் காட்சிகளில் கிராபிக்ஸ் வேலைகள் நன்று. பாடல்களிலும், பின்னணியிலும் சராசரியான இசையைக் கூட தர முடியாமல் திணறி விட்டார் ஹாரிஸ் ஜெயராஜ். வழக்கமாக விஜய் பஞ்ச் வசனங்கள் பேசும் போது காதை மூடிக் கொள்ள நேரிடும். அந்த தொல்லையில் இருந்து சற்றே விடுதலை.  இந்த துப்பாக்கி- விஜய் இரசிகர்களை மட்டும் சுடும்.
[vuukle-powerbar-top]

Recent Post