Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இலங்கைப் படையினர் மீதான குற்றச்சாட்டுகள் – 30 சம்பவங்கள் குறித்த விசாரணை முடிவு

இலங்கை இராணுவத்தினருக்கு எதிராக குற்றம்சாட்டப்பட்டுள்ளதாக நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள 50 சம்பவங்களில், 30 சம்பவங்கள் தொடர்பான விசாரணைகள் முடிவடைந்துள்ளதாக இலங்கை
அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். 

நேற்று இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர்,

“பொறுப்புக்கூறும் தன்மை தொடர்பாக ஜெனிவாவில் எம்மிடம் கேள்விகள் எழுப்பப்பட்டன.

இதன்போது அது தொடர்பாக நாம் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து தெளிவுபடுத்தினோம்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய இலங்கை இராணுவத் தளபதி நியமித்த குழுவினால் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இலங்கை இராணுவத்தினர் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பான ஐம்பது சம்பவங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் இனங்காணப்பட்டுள்ளன.

இவை தொடர்பாக இலங்கை இராணுவத்தினரால் விரிவாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, 30 சம்பவங்கள் தொடர்பான விசாரணைகள் முடிவுக்கு வந்துள்ளன.

இந்த அறிக்கை இலங்கை இராணுவத் தளபதியிடம் கொடுக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், குற்றவாளியாக இனங்காணப்படுவோருக்கு எதிராக இராணுவ சட்டங்களுக்கு அமைய ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்.” என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
[vuukle-powerbar-top]

Recent Post