உத்தரபிரதேச மாநிலத்தில் சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்த இடத்தில், பட்டாசு வெடித்து விபத்து ஏற்பட்டது.
உத்தர பிரதேச மாநிலம், அவுராயா மாவட்டத்தில் உள்ள யாகூப்பூர் நகரத்தில், சில வீடுகளில் சட்ட விரோதமாக பட்டாசுகள் தயாரித்து வந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக பட்டாசுகள் தீப்பிடித்து எரிந்து பலத்த சத்தத்துடன் வெடித்தது. இதில் அங்கு பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி இறந்தார்கள். 12 பேர் படுகாயம் அடைந்துள்ளார்கள்.
விபத்தில் சிக்கியவர்களை போலீசாரும், அப்பகுதி மக்களும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார்கள். தீகாயம் அடைந்தவர்களில் சிலரது நிலமை மிகவும் மோசமாக இருப்பதால் பலியானோர்கள் எண்ணிக்கை உயரக்கூடும் என்று அச்சப்படுகிறது.