"சென்னை 28 " படத்தை இயக்கிய பின்னர் மிக பெரிய இரசிகர்கள் பட்டாளத்தை தனதாக்கி கொண்டவர் இயக்குனர் வெங்கட் பிரபு. இவரின் இயக்கத்தில் அடுத்தடுத்து வெளிவந்த பல படங்கள் வெற்றிவாகை சூடிய நிலையில்,பல முன்னணி நடிகர்கள் இவரின் இயக்கத்தில் நடிக்க மிகுந்த ஆவலுடன் உள்ளனர்.
"சென்னை 28 " படத்தின் இறுதி காட்சியின் படி, இப்படத்தின் இரண்டாவது பாகம் தயாராகும் என்ற நம்பிக்கையில் இருந்த இரசிகர்களின் வேண்டுகோளை புறக்கணிக்கும் வகையில் அமைந்துள்ளது இயக்குனர் வெங்கட் பிரபுவின் பேச்சு.
அண்மையில் நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட வெங்கட் பிரபுவிடம் இது குறித்து கேட்ட போது, "சென்னை 28 " படத்தின் இரண்டாவது பாகத்தை இயக்குவதில் தனக்கு தனிப்பட்ட ரீதியில் விருப்பம் இருந்தாலும்,இப்படத்தில் நடித்த ஜெய், சிவா மற்றும் பிரேம்ஜி ஆகியோர் நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்ந்துவிட்டதாகவும்,அத்தோடு அனைவரும் மிக பரபரப்பாக படங்களில் நடித்துக்கொண்டிருப்பதாலும் அதிகளவிலான சம்பளம் அவர்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும் ஆனால் அவ்வளவு பணம் தன்னிடம் இல்லை எனவேதான் இப்படத்தை மீண்டும் தயாரிக்கும் வாய்ப்பு தனக்கு இல்லை எனவும் தெரிவித்தார்.