முழு வீச்சில் நடைபெற்று வரும் இயக்குனர் ஹரியின் "சிங்கம் 2 " படத்திற்காக ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார் அஞ்சலி.மிக விரைவாகவும் மற்றும் நேர்த்தியாகவும் படங்களை இயக்குவதில்
கை தேர்ந்தவர் ஹரி.இவர் ஒரு படத்தை இயக்க ஆரம்பித்தால் அப்படத்திற்கான படப்பிடிப்பு மிக விரைவாக நடைபெறும்.
அந்த வகையில் மிக பரபரப்பாக நடைபெற்று வரும் "சிங்கம் 2 " படத்திற்காக ஒரு பாடல் காட்சியில் தோன்றி நடனம் ஆடும் அஞ்சலி சம்பந்தப்பட்ட காட்சிகள் ஒரே நாளில் படமாக்கப்பட்டன.குறித்த நேரத்திற்கு முன்னதாக இக்காட்சி படமாக்கப்பட்டதால் ஹரியின் பாராட்டை சிறந்த முறையில் பெற்றுள்ளார் அஞ்சலி.
ஆரம்பத்தில் இப்பாடல் காட்சியில் தோன்றி நடனம் ஆட இருந்தார் நயன்தாரா, ஆயினும் பின்னர் இக்காட்சியில் நடிக்க அவர் மறுத்ததால் அஞ்சலி ஒப்பந்தமானார்.
"சிங்கம் 2 " படத்தில் நடிகர் சூர்யா நடிகைகள் ஹன்ஷிகா மற்றும் அனுஷ்கா ஆகியோர் நாயகன் மற்றும் நாயகிகளாக நடித்துக்கொண்டுள்ளனர்.சந்தானம் மற்றும் விவேக் நகைச்சுவை கதாபாத்திரத்தை ஏற்றுள்ளனர்.