
மத்திய தொகுப்பிலிருந்து கூடுதல் மின்சாரத்தை தமிழகத்துக்கு அளிக்க வேண்டும் என்று பிரதமருக்கு தமிழக முதலமைச்சர் கடிதம் எழுதியிருப்பது பற்றிய கேள்விக்கு பதிலளித்தபோது அவர் இதனை தெரிவித்தார்.
கூடங்குளம் மின்சாரம் முழுவதும் தமிழகத்துக்கு தர வேண்டும் என்ற கோரிக்கை குறித்த கேள்விக்கு, கூடங்குளத்தில் மின்சார உற்பத்தி தொடங்கப் பட்டவுடன் தமிழகத்துக்கு கூடுதல் மின்சாரம் வழங்க வேண்டி பிரதமரிடம் வலியுறுத்வேன் என்று கூறினார்.