திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டனர். மேலும் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
பாளையங்கோட்டையைச் சேர்ந்த ரவிசங்கருக்கு மனைவியும் 5 குழந்தைகளும் இருந்தனர். மலர்வனம் என்ற கடைசி குழந்தை மனநலம் குன்றியிருந்தது.
மருத்துவமனைகள் பலவற்றில் குழந்தைக்கு சிகிச்சை எடுத்தும் பலனளிக்காததால், விரக்தியடைந்த ரவிசங்கர் தம்பதி தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தனர்.
நேற்று இரவு குளிர்பானத்தில் விஷத்தைக் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்துவிட்டு குடித்துள்ளனர்.
இதில் ரவிஷங்கரின் மனைவி மாரியம்மாள், குழந்தைகள் மகாலக்ஷமி, மகாராஜன், மகாதேவன், மலர்வனம் ஆகிய 5 பேரும் உயிரிழந்தனர்.
ரவிசங்கர் அவரது மகன் மணிகண்டன் ஆகிய இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இன்று காலை மருத்துவமனையில் சேர்க்கப் பட்டனர்.
இதில் ரவிசங்கர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆபத்து கட்டத்தை தாண்டாத மணிகண்டனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது.