மெனிக் பாம் முகாமை அவசர அவசரமாக மூடிவிட்டு, இறுதிக்கட்டமாக எஞ்சியிருந்த இடம்பெயர்ந்த மக்களை எந்த அடிப்படை வசதிகளும் இல்லாத இடங்களில் இலங்கை அரசாங்கம் மீளக்குடியமர்த்தியது குறித்து அமெரிக்கா கவலை வெளியிட்டுள்ளது.
26 ஆண்டு கால ஆயுத மோதல்களுக்குப் பின்னர் இடம்பெயர்ந்த பெருமளவு மக்களை, இலங்கை அரசாங்கம் விரைவாக மீளக்குடியமர்த்தியதை அமெரிக்கா வரவேற்றுள்ளது.
அதேவேளை, இறுதிக்கட்டமாக எஞ்சியிருந்த மக்களை வெளியேற்றி விட்டு மெனிக் பாம் முகாமை மூடியது குறித்து கவலையடைவதாகவும் அமெரிக்கா கூறியுள்ளது.
வடக்கில் போரினால் மோசமாகப் பாதிக்கப்பட்ட குடும்பங்கள், எந்தவிதமான இருப்பிட வசதிகளோ, குடிநீர், சுகாதார வசதிகளோ, வாழ்வாதார உதவிகளோ இல்லாமல் மீளக்குடியேற்றப்பட்டுள்ளனர் என்றும் அமெரிக்கா விசனம் வெளியிட்டுள்ளது.
அத்துடன், வடக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உதவிகளை வழங்குவதற்கு மூன்று அரசசார்பற்ற நிறுவனங்களின் மூலம் 3 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளதாகவும் அமெரிக்கா அறிவித்துள்ளது.