மிக மும்முரமாக படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் ஸ்ருதி ஹாசன், தன் உடல் நிலை பற்றிய கவனம் இல்லாமல், தமிழ், தெலுகு மற்றும் ஹிந்தி மொழிப் படங்களில் மிக பரபரப்பாக நடித்துக் கொண்டுள்ளார்.
தற்போது இயக்குனர் பிரபு தேவா இயக்கத்தில், இந்திப் படமொன்றில் நடித்து வரும் ஸ்ருதி, புனே நகரில் நடைபெறும் படப்பிடிப்பை முடித்துவிட்டு, ஒரு வேலையின் நிமித்தம் சென்னை வந்திருந்தார்.ஓடி ஓடி படங்களில் நடித்து வருவதால் உடல் சோர்வாலும், நீர் வரற்சியாலும் மிகவும் பாதிக்கப்பட்டிருந்த அவரை அவரது உறவினர்கள் மருத்துவ சோதனைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
தேவையான மருத்துவ சோதனைகளுக்கு உற்பட்டிருந்த ஸ்ருதி வைத்தியர்களின் ஆலோசைனையின் பேரில் சிறிது நேரம் ஓய்வெடுத்ததன் பின்னர், புனேயில் நடைபெறும் படப்பிடிப்பிற்காக சென்றுள்ளார்.
உடல் நலம் குறைவாக இருந்தாலும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள சென்றுள்ள ஸ்ருதியின் பங்களிப்பை பார்த்து வியந்து போயுள்ளார் இப்படத்தின் தயாரிப்பாளர் குமார் தவ்ரணி.இவ்வாறான ஒரு நடிகை தன் படத்தில் நடிப்பது தனக்கு பெருமையாக இருப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.