Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

சென்னை நகரில் நேற்று வெயிலின் தாக்கம் குறைந்தது

கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து இப்போது தான் சென்னை நகர மக்கள் சற்று மீண்டு வருகிறார்கள். வெயில் ஓரளவு குறைந்து உள்ளது. சென்னையில் நேற்று வெயில் கடுமையாக இல்லை என்றபோதிலும் வெயிலின் உஷ்ணத்தை உணர முடிந்தது.

கேரளாவில் தென்மேற்கு பருவ மழை பெய்து வருவதால் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டிய பகுதிகளான திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, தேனி, கோவை, ஊட்டி உள்பட பல ஊர்களில் சாரல் மழை பெய்து, மக்களை குளிர்வித்து வருகிறது.

இரவில் தரைக்காற்று வீசுவதால் வட தமிழகத்திலும் வெப்பம் ஓரளவு குறைந்து உள்ளது. சென்னை, வேலூர், கடலூர், புதுச்சேரி பகுதிகளில் வெப்ப சலனம் காரணமாக மாலை நேரத்தில் அவ்வப்போது சில பகுதிகளில் மழை பெய்கிறது. சென்னையின் புறநகர் பகுதிகளிலும் இரவு நேரத்தில் தூறலுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

இதுபற்றி சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறும்போது, "தமிழகம் மற்றும் புதுச்சேரி வடக்கு பகுதியில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரத்தில் இடி மேகம் உருவாகக்கூடும். தரைக்காற்று சில சமயங்களில் வலுத்து வீசக்கூடும்'' என்றார்.

வெயில் அளவு

தமிழகத்தில் பல இடங்களில் நேற்று 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகியது.

தமிழகம் முழுவதும் நேற்று பதிவான வெயில் அளவு விவரம் வருமாறு:-

சென்னை மீனம்பாக்கம்- 100.94 டிகிரி (38.3 செல்சியஸ்)

சென்னை நுங்கம்பாக்கம்- 100.94 டிகிரி (38.3 செல்சியஸ்)

கோவை- 92.84 டிகிரி (33.8 செல்சியஸ்)

கடலூர்- 100.4 டிகிரி (38 செல்சியஸ்)

கன்னியாகுமரி- 91.76 டிகிரி (33.2 செல்சியஸ்)

மதுரை- 103.82 டிகிரி (39.9 செல்சியஸ்)

நாகப்பட்டினம்- 101.12 டிகிரி (38.4 செல்சியஸ்)

பாளையங்கோட்டை- 97.88 டிகிரி (36.6 செல்சியஸ்)

புதுச்சேரி- 101.12 டிகிரி (38.4 செல்சியஸ்)

சேலம்- 97.88 டிகிரி (36.6 செல்சியஸ்)

திருச்சி- 100.04 டிகிரி (37.8 செல்சியஸ்)

தூத்துக்குடி- 99.68 டிகிரி (37.6 செல்சியஸ்)
[vuukle-powerbar-top]

Recent Post