Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

சிறந்த ஆவணப் படமாக இலங்கையின் கொலைக்களத்தை தேர்வு செய்ய உடனே வாக்களியுங்கள்




சிறந்த ஆவணப் படமாக இலங்கையின் கொலைக்களத்தை தேர்வு செய்ய உடனே வாக்களியுங்கள். 

தமிழர்கள் மீதான இலங்கையின் போர்குற்றங்கள் மற்றும் மானிடத்துக்கு எதிரான குற்றங்களை சர்வதேச அரங்கில் அம்பலப்படுத்திய ஆவணப்படமாகவுள்ள பிரித்தானியாவின் சனல்-4 தொலைக்காட்சியின் இலங்கையின் கொலைக்களங்கள் ஆவணப்படம் பிரிட்டன் (Bafta TV Awards 2012) தொலைகாட்சி விருதுக்கான போட்டிக்களத்தில் உள்ளது. தொலைக்காட்சி மற்றும் திரைத்துறை ஆகியவற்றிக்கான ( The British Academy of Film and Television Arts) இவ்விருதானது பிரித்தானியாவின் முக்கிய விருதாக கவனிக்கப்படுகின்றது. தொலைக்காட்சி ஆவணப்பட விருத்துக்கான போட்டிக்களத்தில் நான்கு ஆவணப்படங்கள் பார்வையாளர்களின் வாக்களிப்புக்கு இணையத்தளத்தில் திறந்துவிடப்பட்டுள்ளது.

சனல்-4 தொலைக்காட்சியின் இலங்கையின் கொலைக்களங்கள் உட்பட Bahrain:Shouting in the Dark (Al Jazeera), The Truth About Adoption - Panorama(BBC1), Undercover Care - The Abuse Exposed (BBC1) ஆகிய ஆவணப்படங்கள் போட்டிக்களத்தில் உள்ளது. இதில் Bahrain:Shouting in the Dark/ Sri Lanka’s Killing Fields (Channel 4) ஆகிய இரு ஆவணப்படங்கள் இதுவரை 100,000 பார்வையாளர்களது வாக்களிப்பினை பெற்றுள்ளதாக இணையத்தளச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்தாக இலங்கையின் கொலைக் களம் ஆவப்படம் இரண்டாம் இடத்தில் 20 ,௦௦0 வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கி இருந்தது.

ஆனால் தமிழர்களின் இணைய பிரச்சாரத்தின் மூலம், இலங்கையின் கொலைக்களம் தற்போது மிகக் குறுகிய வாக்குகள் வித்தியாசத்தில் முதல் இடத்திற்கு வந்து கொண்டிருகிறது. இந்த வாக்கெடுப்பு என்பது எந்த விதத்திலும் விருதின் முடிவை தீர்மானிக்காது என்றாலும், முதல் இடத்தில் இலங்கையின் கொலைக் களத்தை கொண்டு வருவதின் மூலம் இலங்கையின் போற்குற்றங்களை உலக மக்களின் கவனத்திற்கு கொண்டு வரலாம். வாக்கெடுப்பில் கலந்து கொண்டு தங்களது தேர்வினை இட்டுக்கொள்ள

http://www.radiotimes.com/news/2012-04-30/watch-bahrain-shouting-in-the-dark-and-sri-lanka%27s-killing-fields

குறித்த இந்த இணையத்தளத்திற்கு செல்லவேண்டும். உலகத் தமிழர்கள் அனைவரும் சிறிது நேரம் ஒதுக்கி இந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ள வேண்டும் என நாடு கடந்த தமிழீழ அரசும், பல்வேறு தமிழர் அமைப்புகளும் அழைப்பு விடுத்துள்ளது.


[vuukle-powerbar-top]

Recent Post