Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

2 பாக். ராணுவ வீரர்கள் தலை துண்டித்து கொலை தலீபான்கள் அட்டூழியம்

பாகிஸ்தானில் வசிரிஸ்தான் பகுதியில் உள்ள மிரான்ஷா என்ற இடத்தில் நேற்று முன்தினம் இரவில் தீவிரவாதிகளுக்கு எதிரான வேட்டையில் ராணுவத்தினர் ஈடுபட்டனர். இதையொட்டி நடந்த சண்டையில் 9 வீரர்களும், 3 தீவிரவாதிகளும் செத்தனர்.

அப்போது 2 ராணுவ வீரர்களை தலீபான் தீவிரவாதிகள் கடத்திச் சென்றனர். இந்த இருவரையும் தலையை துண்டித்து கொடூரமாக கொன்றனர். அதன்பிறகு அதே பகுதியில் உள்ள மரத்தூண்களில் 2 தலைகளையும் தொங்க விட்டார்கள். இந்த தகவல் நேற்று ராணுவ உயர் அதிகாரிகளுக்கு தெரியவந்ததும் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.
[vuukle-powerbar-top]

Recent Post