
மேலும் இந்த புதிய இயங்குதளத்தை உருவாக்கும் பணிகள் மிக துரிதமாக நடந்து கொண்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Mountain Lion இயங்குதளத்தில் வரும் மேக்ஸ் சாதனங்கள் ஏற்கனவே Dictation and Text-to-Speech போன்ற Application-களை பயன்படுத்தி வருகின்றன.
இந்நிலையில் இந்த புதிய இயங்குதளத்தில் Siri என்ற அப்ளிகேசன் வரும் போது மேக்ஸ் சாதனங்களைப் பயன்படுத்துபவர்கள் Voice Command மற்றும் தேடும் வசதி போன்ற சிறப்பு வசதிகளை பெறலாம்.
மேலும் இந்த புதிய இயங்குதளத்தில் Apple Maps மிக சூப்பராக வர இருக்கிறது.
ஆனாலும் மேற்சொன்ன வதந்திகள் அனைத்தும் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. மேலும் இந்த புதிய இயங்கு தளம் எப்போது வெளியாகும் என்பதும் தெரிவிக்கப்படவில்லை.
எனினும் 2013 தொடக்கத்தில் இந்த புதிய இயங்கு தளம் வெளிவந்துவிடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.