
தீபாவளிக்கு முன்னதாக 3 மாத சம்பள நிலுவைத் தொகையை அளிப்பதாக கிங் ஃபிஷர் நிர்வாகம் அளித்த உறுதிமொழியை ஏற்று வேலைநிறுத்தத்தை ஊழியர்கள் விலக்கிக் கொண்டனர்.
ஆனால், நேற்று இரவு வரை, தங்கள் வங்கிக் கணக்கில் சம்பளத் தொகை வந்து சேரவில்லை என்று ஊழியர்கள் தரப்பில் கூறப்படுகிறது. அதனால், சுமார் 3 ஆயிரம் ஊழியர்களுக்கு இந்த ஆண்டு தீபாவளி ஏமாற்றம் அளிப்பதாக அமைந்ததாக கூறப்படுகிறது.
தீபாவளிக்கு முன்னதாக சம்பள நிலுவைத் தொகையை அளிப்பதாக கிங்ஃபிஷர் நிறுவன தலைவர் விஜய் மல்லையா, இமெயில் கடிதம் மூலம் ஊழியர்களிடம் உறுதி அளித்திருந்ததாக தகவல் வெளியானது. இதுபற்றி கருத்து தெரிவிக்க கிங்ஃபிஷர் நிறுவன செய்தித் தொடர்பாளர் மறுத்து விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.