
இவர்கள் கிறிஸ்மஸ் தீவில் இருந்து விமானம் மூலம் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக, அவுஸ்ரேலிய குடிவரவு அமைச்சர் கிறிஸ் பொவன் தெரிவித்துள்ளார்.
இவர்களையும் சேர்த்து, கடந்த ஓகஸ்ட் மாதம் 13ம் நாளுக்குப் பின்னர், இலங்கையில் இருந்து அவுஸ்ரேலியா வந்த 200 பேர் கட்டாயமாக கொழும்புக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
செல்லுபடியற்ற நுழைவிசைவு இல்லாமல் அவுஸ்ரேலியாவுக்குள் நுழைவோர், அங்கு தங்கியிருப்பதற்கு சட்டரீதியான உரிமையில்லை என்றும், அவர்கள் கூடிய விரைவில் திருப்பி அனுப்பப்படுவர் என்றும் கிறிஸ் பொவன் தெரிவித்துள்ளார்.