விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில், முக்கிய பங்காற்றிய இலங்கை இராணுவத் தளபதிகள் மூவர், வெளிநாடுகளில் உள்ள தூதரகங்களில் இராஜதந்திரிகளாக - இரண்டாம் நிலைப் பதவிகளில் அமர்த்தப்படவுள்ளனர்.
இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் சமர்ப்பித்த இது தொடர்பான திட்டத்துக்கு இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஐ.நாவுக்கான பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாகப் பணியாற்றும் மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா, தென்னாபிரிக்காவுக்கான பிரதித் தூதுவராக நியமிக்கப்படவுள்ளார்.
இலங்கை அதிபரின் பாதுகாப்புப் பிரிவின் முன்னாள் தளபதியும், தற்போது இலங்கை இராணுவத் தலைமையகத்தில் பொது அதிகாரிகளுக்கான பணிப்பாளர் நாயகமாக பணியாற்றுபவருமான மேஜர் ஜெனரல் ஜெகத் அல்விஸ், இஸ்ரேலுக்கான பிரதித் தூதுவராக நியமிக்கப்படவுள்ளார்.
இலங்கை இராணுவத் தலைமையகத்தில் பணியாற்றும் மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன, பிறேசிலுக்கான பிரதித் தூதுவராக நியமிக்கப்படவுள்ளார்.