Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இலங்கைக்கு அதிகரிக்கும் நெருக்கடி : மனித உரிமைகள் மீளாய்வுக் கூட்டத்தில் 110 பரிந்துரைகள்


ஜெனீவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் மீளாய்வுக் கூட்டத்தில் இலங்கையின் மீது அழுத்தங்கள் அதிகரித்துள்ளது.இலங்கைக்கு 110 பரிந்துரைகளை அமல்படுத்த ஐக்கிய நாடுகள் சபை உத்தரவிட்டுள்ளது.
ஜெனீவாவில் நவம்பர் 1-ம் தேதி மனித உரிமைகள் மீளாய்வுக் கூட்டத்தில் இலங்கையின் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர் குற்றங்கள் பற்றி பல்வேறு நாடுகள் கேள்வி எழுப்பின. இந்தியா சார்பில் வடக்கு மாகாணங்கள் தேர்தல்,மனித உரிமை மீறல்கள், நில அபகரிப்பு போன்றவற்றைப் பற்றி பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன.

மேலும் அமெரிக்கா,கனடா,பிரித்தானியா போன்ற 99 நாடுகள் மனித உரிமைகள் பற்றி இலங்கையிடம் கேள்விகள் எழுப்பின.இந்த கேள்விகளுக்கு இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் மகிந்த சமரசிங்கே சில விளக்கங்களை அளித்தார்.போருக்கு பின்னரான இலங்கை அரசின் முன்னேற்ற நடவடிக்கைகளையும் அவர் விளக்கினார்.

இதன் பின்னர் நேற்று இலங்கைக்கு 99 நாடுகள் சேர்ந்து 210 பரிந்துரைகளை அளித்து அமல்படுத்துமாறு கேட்டுக்கொள்ளபட்டது.ஆனால் இலங்கை 100 பரிந்துரைகளை நிராகரித்துவிட்டு 110 பரிந்துரைகளை மட்டும் அமல்படுத்த ஒப்புக்கொண்டுள்ளது.

இந்த நிலையில் சர்வேதேச நிலையில் இலங்கையின் மீது அழுத்தங்கள் அதிகரித்துள்ளது என மனித உரிமை அமைப்புகள் கூறியுள்ளது.மேலும் இனிமேல் இலங்கையின் நடவடிக்கைகள் உற்று நோக்கப்படும் எனவும் தெரிகிறது.

[vuukle-powerbar-top]

Recent Post